முந்நூறு பக்கங்களை முழுமூச்சில் வாசிப்பேன்; கிரைம் நாவல் கிடைத்தால் முற்றுப் புள்ளி வரை படிப்பேன்; காதல் கதைகள் என்றாலோ கண்கள் இமைக்காது. இப்படியானப் புத்தகப் புழுக்களுக்கு பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புனித நூல்களைப் படித்து முடிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. சரி! அப்படி அவர்கள் படித்து விட்டால் இறையருள் கிடைத்துவிடுமா?