ஊழல் ஒழிய - தேவை மாற்றம்

FILE

சுதந்திரப் போராட்டத்தின்போது, நம்மிடையே கடலளவு தலைவர்கள் இருந்தார்கள், ஆனால் அது வேறுவிதமான தலைமையாக இருந்தது. அப்போது மக்கள் ஒரு ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராகப் போராடி வந்தனர். அப்படிப்பட்ட ஒரு தலைவருக்கு சிறந்த உதாரணமாக மகாத்மா காந்தி விளங்கினார். அவர் அற்புதமாக செயலாற்றினார்.

இப்போது இந்த நாட்டுக்கு கண்டிப்பாக வேறொரு தளத்தில் இருக்கும் தலைமை தேவை. அவர்கள் ஞானிகளாக, மகான்களாக இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் இப்போது அவர்கள் இந்த தேசத்தின் அடித்தளத்தையே அரித்து தின்று கொண்டிருக்கிறார்கள்.

இதில் அரசியல் தலைமைகளை மட்டும் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை; இந்த தேசத்தின் பொதுவான இறையாண்மையே நம்ப முடியாத அளவில் கீழிறங்கிவிட்டது. நான் ஒரு சில சந்திப்புகளுக்குப் போகும்போது, மக்கள் என்னிடம், 'அரசியல்வாதிகள் அனைவருமே ஊழல்வாதிகள்' என்று சொல்கிறார்கள். அதற்கு நான் அவர்களிடம், 'அப்படிச் சொல்லாதீர்கள். இப்போது நான் உங்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன். உங்கள் ஊரில் வண்டியோட்டிக் கொண்டிருக்கிறீர்கள். காவல்துறை அதிகாரி யாரும் அப்போது சாலையில் இல்லை. சாலையில் சிவப்பு விளக்கு எரிகிறது. உங்களில் எத்தனை பேர் நிறுத்திச் செல்வீர்கள்? 10% பேர் கூட நிறுத்த மாட்டீர்கள். அப்படிப்பட்ட உங்களை நான் பிரதமராக ஆக்கினால், நீங்கள் எப்படிப்பட்ட பிரதமராக இருப்பீர்கள்?' என்று கேட்பேன். நம்மைப் போன்றவர்கள் தானே நமக்கு தலைவராக வாய்ப்பார்கள்.

ஆகவே இதில் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. நமது பொதுவான இறையாண்மைத் தன்மையே மிகவும் தாழ்ந்து போய்விட்டது. அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால், மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள்.

ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறை இடைவெளியில, இந்த இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது, இதை மீண்டும் உயர்த்துவதற்கு நாம் உண்மையான முயற்சி எதையும் செய்யவில்லை.
அரசியல்வாதிகளும் உங்களைப் போன்றவர்கள்தான்; அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்; நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அவ்வளவுதான் வித்தியாசம், இல்லையா? உங்களுக்கு யாரும் வாக்களிக்க விரும்பவில்லை, சிலர் அவர்களுக்கு வாக்களிக்க விரும்பியிருக்கிறார்கள். சிலருக்கு தங்களுடைய பண்புகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்துள்ளது, சிலருக்குக் கிடைக்கவில்லை.

ஆகவே நாம் நம்மைப் போன்றவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். எப்போதும், அனைத்துக்கும் அரசியல்வாதிகளை குறை கூறுவது என்பது இந்த நாட்டில் இன்னொரு பொழுதுபோக்கு. நாம் தலைமைகளிடமிருந்து நிறைய எதிர்பார்த்தாலும், நம் தகுதிக்கேற்ற தலைவர்கள்தான் கிடைப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடையே ஒற்றுமை இல்லாததால், தலைவர்களிடையேயும் ஒற்றுமை இல்லை.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் மனதில் விதைத்திருக்கும் ஊழலின் விளைவுதான் இது. இது முதலமைச்சரைப் பற்றியோ அல்லது பிரதமரைப் பற்றியோ அல்லது அரசாங்க ஊழியர்களைப் பற்றியோ அல்லது வேறொருவரைப் பற்றியதோ அல்ல.

'உன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாதே, உன்னை மட்டும் பார்த்துக் கொள்' - இது ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு தாயும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டிய ஒரு பண்பு. பெரும்பாலான குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கு இதைத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா? ஆகவே ஊழல் என்பது இங்கு மிக இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும், ஆனால் இது ஒரே நாளில் மாறிவிடாது. முதலில் நம்மை நாம் மாற்றிக் கொண்டு, பிறகு நம் குழந்தைகளை, நாம் செய்யும் வேலைகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

Webdunia|
மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட ஓர் இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள். ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறைக்குப் பிறகு, நம் நாட்டின் இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இதை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன வழி? ஊழலை ஒழிக்க என்ன வழி? விளக்குகிறார் சத்குரு...
இதை நாம் அனைத்து நிலைகளிலும் மாற்ற வேண்டும். இது சுலபமல்ல; இதனால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும், ஏனென்றால் உங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகள், ஒரு நாளில் லட்சம் முறை உங்களை அவற்றின் வழிகளில் உள்ளிழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் உண்மையிலேயே எதையாவது செய்ய வேண்டுமென்றால், நாம் நன்றாக வாழக் கூடிய ஒரு தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், இதைச் செய்துதான் ஆக வேண்டும்; வேறு வழியே இல்லை.


இதில் மேலும் படிக்கவும் :