1999ம் வருடம் நவம்பர் மாதம் 23ம் தேதி தியானலிங்கத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விவரிக்க முடியாத வியப்பு அது. சொல்ல முடியாத அனுபவமாக இருந்தது. அன்று எனக்குள் என்ன நிகழ்ந்தது என்பதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. தியானலிங்கத்தை உலகுக்குக் கொண்டுவந்த அன்று எனக்கு அதன் முன் பாடும் வாய்ப்பு கிடைத்தது, என் வாழ்வின் பாக்கியம்.