ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 9

WD
உயிர்களின் ஊர்வலம்!

அடுத்த நாள் காலை மானஸரோவர் கரையில் கூடினோம். ஏரியில் கால் வைத்து நடக்கும்போது சிவனின் மீது நடக்கிறோம் என்ற உணர்வோடு நடக்க வலியுறுத்தினார்.

அதே போல நாங்கள் மானஸரோவரில் கால் பதித்தபோது கட்டுக்கடங்காத இறையுணர்வு எங்களை ஆட்கொண்டது. கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வெள்ளம்.

பின்னர் நடந்த சத்சங்கத்தில் சத்குரு,

புத்தர் வருவார்...
ஞானம் அடைந்தவர்கள் 11 பேர் கூடினால், புத்தர் வருவார் என்பது வெறும் கதையாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். அது உண்மையாகவும் இருக்க முடியும்.
"மனித இன வளர்ச்சியில் நிச்சயமாக இவற்றுக்குத் தொடர்பு இருக்கவேண்டும். ஏனெனில், மனித உடலில் இவை ஈர்க்கப்படுவது என்பது நான் அறிந்த வரையில் மிக வித்தியாசமானதாகவும் மிக அரிதான ஒன்றாகவும் உள்ளது. மனிதர்களைக் கண்டால் அவை கூச்சம் அடைகின்றன. நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இல்லாவிட்டால், எளிதாக அவை மனிதர்களிடம் வருவதில்லை. ஆனால் நீங்கள் ஒரு அழைப்பை, ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் அவை அதை நோக்கிச் செல்கின்றன. அவற்றின் மனதில் எந்தப் பாலுணர்வும் இல்லை. உண்மையில் அவற்றுக்கு ஆண், பெண் வித்தியாசமே தெரியாது. ஆனால் அவற்றை ஈர்க்க ஒரு ஆணின் உடலைவிட பெண்ணின் உடல் எளிதானது.

எனவே, அவை பெண்ணுடலை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. பாலுணர்வு குறித்து அவை சிந்திப்பதில்லை. பாலுணர்வு என்று சொல்லும்போது பொதுவாக அதனை ஒரு செயலாகவே நாம் எண்ணுகிறோம். நான் பாலுணர்வை அந்த ரீதியில் குறிப்பிடவில்லை. உடல் உருவாக்கத்தின் மூலமாகக் குறிப்பிடுகிறேன். யோகத்தில் பாலுணர்வு மையம் கொண்ட சுவாதிஷ்டானச் சக்கரத்தை ‘சுயம் இருக்குமிடம்‘ என்பர்.

WD
அதனால்தான் ஆன்மிகப் பாதையில் பிரம்மச்சரியம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் இது சுயம் வீற்றிருக்கும் இடம். வெளிச்சூழல்களின் தாக்குதலுக்கு இது ஆளாவதில்லை. வெளிச் சூழல்களின் தாக்குதலுக்கு உட்பட்டால், இது ஒரு மலராய் மலராமல் மக்கள் தொகை பெருகத்தான் வழிவகுக்கும். அதுதான் நோக்கம் என்றால் பரவாயில்லை. ஆனால் உங்கள் நோக்கம், ஆழமான இன்ப உணர்வை உங்களுக்குள் கொண்டுவருதல்தான் என்றால், நீங்கள் என்றென்றும் படைத்தவரிடம் நன்றியுணர்வோடு வாழ்வீர்கள். அதற்குத்தான் பிரம்மச்சரியம்.

Webdunia|
மானஸரோவர்!
கணநேர இன்பத்துக்குத்தான் நீங்கள் பாலுறவில் ஈடுபடுகிறீர்கள். அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. பாலுறவில் இன்பமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது, இல்லாவிட்டால், யார் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறார்கள்? யாரும் அந்தத் தொந்தரவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை.


இதில் மேலும் படிக்கவும் :