ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 6

WD
கைலாஷைப் பார்ப்பதற்கு முன்னர் இந்தக் கேள்வி கேட்கப்பட்டதால், சத்குரு சொல்லப் போவதை ஆர்வமாய் கேட்கத் தயாரானோம். சத்குரு சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார். “இந்தியர்கள் மட்டும்தான் சிவனை வழிபடுகிறார்கள். ஆனால் அதில் பலர் சிவனின் வேலையை தம் கைகளில் எடுத்துக்கொண்டார்கள்.

யோகக் கலாச்சாரத்தில் சிவனை ‘முதலாவது யோகி’, அதாவது ‘ஆதி யோகி’ என்றும் ‘ஆதிகுரு’ என்றும் சொல்கிறோம். ஆனால் ‘சிவா’ என்றால் ‘எது இல்லாததோ அது’ என்று பொருள். எதுவுமாக இல்லாதது எப்படி அழிப்பவராக இருக்க முடியும் என்று தோன்றலாம்.

ஏதாவது ஒன்றாக இருப்பதுதானே எதையாவது செய்ய முடியும்? ஆனால் எதுவுமாக இல்லாதது எப்படி அழிப்பவராக இருக்க முடியும்? ஆனால் நவீன விஞ்ஞானமும் இன்று இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது. பிரபஞ்சத்தின் மையம் ஒரு வெற்றிடம் என்றும் அது சுற்றிலும் உள்ளவற்றை உள்ளிழுத்து அழிப்பதாகவும் வரையறுக்கின்றனர். இருப்பவை, இல்லாதவற்றுள் இழுக்கப்பட்டு அழிந்துபோகிறது. ஏதோ ஒன்றாக இருப்பது ஒன்றுமில்லாததாக ஆகிறது.

இந்த ஒன்றுமில்லாத்தன்மையை ‘சிவம்’ என்கிறோம். படைப்பு நிகழ்ந்து மீண்டும் இல்லாமல் போவது இதில்தான். சிவனை அழிப்பவர் என்கிறோம். அதே நேரத்தில் அவர்தான் மகாதேவனாகவும், கடவுளர்க்கும் படைப்பவருக்கும்கூட தலைவனாகவும் இருக்கிறார். இது ஒரு விஞ்ஞானம்.

மூ‌ன்றாவது க‌ண்!
படைப்புக்கும் அழித்தலுக்கும் அடிப்படை சிவன். அதே நேரம் உச்சபட்சப் புரிதலும்கூட. அதனால்தான் மூன்றாவது கண் அவருக்கு உள்ளதாகவும் சித்தரிக்கப்படுகிறது.
படைத்தல், அழித்தல் செயல்முறைக்கும், படைப்பு எப்படி நிகழ்ந்தது என்பதற்கும் இதுதான் உச்சபட்ச விளக்கம். இன்று விஞ்ஞானம் அந்தக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் அதைத் தொடவில்லை. ஆனால் நெருக்கமாய் வந்திருக்கிறது. ஆனால் நம் அனுபவத்தில் ஏற்கனவே இதை நாம் அறிந்திருக்கிறோம்.

எனவே படைப்பு எங்கே தொடங்கியது, எப்படி நடந்தது, எப்போது நடந்தது? இதைக் கண்டுகொள்ள விஞ்ஞானிகள் பலவற்றையும் புரட்டிப் படிக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், உங்களுக்குள் ஆழமாகச் செல்லச் செல்ல, இந்த உயிர்சக்தி பல தகவல்களைச் சுமந்து வந்திருப்பதைப் பார்ப்பீர்கள். ஒரு செல் உயிரியாக இருந்து பரிணாம வளர்ச்சியில் பலவற்றைச் சுமந்து வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, அதற்கும் முன்னர் மூலக்கூறுகளாகவும் அதையும் தாண்டி ஒன்றுமில்லா அண்டவெளிக்கும் அப்பால் இது செல்கிறது.

அந்த வெற்றிடத்திலிருந்துதான் எல்லாம் தோன்றின. உயிர் எப்படியெல்லாம் பரிணமித்ததோ அதன் எல்லாத் தகவல்களும் இப்போது இந்த உயிரில் அப்படியே சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே இதை உணர பிரபஞ்சம் முழுக்க ஆராய்ச்சி தேவையில்லை. உங்களுக்குள்ளேயே பிரபஞ்சம் இருக்கிறது. இந்த ஒன்றை உணர்ந்தால், இதுதான் எல்லாம்!
Webdunia|
சாகா, திபெத்பயணத்தின் போது சத்குருவின் சத்சங்கம் நடந்ததாலும், அவை கைலாஷ் மானஸரோவர் பற்றியே இருந்ததாலும், எங்கள் இதயம் முழுக்க இறையருள் நிரம்பிய அந்த இடங்களைக் காண ஏங்கிக்கொண்டு இருந்தது.
சத்சங்கங்களில் எங்கள் கேள்விகள் புதுப்புதுப் பரிமாணங்களில் பதில்களைப் பெற்றன... கைலாஷ் மலைப் புராணங்களில் சிவனைத் தொடர்புபடுத்தி இருந்ததால், கேள்வி சிவனைப் பற்றித் திரும்பியது... “இந்தியாவில் மட்டும்தான் சிவனை வழிபடுகிறார்களா?” என ஒரு பங்கேற்பாளர் கேட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :