வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. இன்றைய மங்கை
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2014 (15:55 IST)

மேடையேறிய இளம் சிட்டுக்கள்

பாரம்பரிய இசையான கர்நாடக இசையையும், சென்னையையும் பிரிக்க முடியாது. டிசம்பர் மாதம் இங்கு நடக்கும் மார்கழி உற்சவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து இசை ரசிகர்கள் வருவது வழக்கம்.கலைஞர்களின் அரங்கேற்றங்களால் சென்னையில் உள்ள அனைத்து சபாக்களும் கலகலப்பாகக் காணப்படும்.பல இளம் இசை கலைஞர்கள் ஆண்டுதோறும் அரங்கேற்றம் கண்டாலும், பள்ளி பருவ குழந்தைகளிடம் பாரம்பரிய இசையைக் கொண்டு செல்லும் பணி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
FILE

டிசம்பர் 31ஆம் தேதி நுங்கம்பாக்கம் இந்தியன் பைன் ஆர்ட்ஸில் நடந்த முனைவர் சுதா ராஜா என்ற கர்நாடக இசை கலைஞரின் கச்சேரியுடன் கூடிய விரிவுரையைக் கேட்டவர்களுக்கு அந்த சந்தேகம் ஏற்படாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சர்கம் என்ற இசை வகுப்பை நடத்தி வருகிறார் சுதா ராஜா.

FILE

இவரது வகுப்புகளில் 4 வயது முதலே குழந்தைகள் பாட்டுக்களைக் கற்று வருகிறார்கள். சில பெரியவர்களும் இந்த வகுப்புகளில் பங்கேற்றாலும், குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம். ‘மஹாகணபதிம்...’ போன்ற கர்நாடக இசை பாடல்களாக இருந்தாலும் சரி, ‘சாந்தி நிலவ வேண்டும்..’ என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளாக இருந்தாலும் சரி. மழலை சொற்கள் கலக்காமல் மூத்த இசை கலைஞர்களைப் போன்றே இனிமையாகப் பாடினார்கள் குழந்தைகள்.
FILE

மொத்தம் 100 இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். அவர்களில் 70 சதவீதம் குழந்தைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி, வந்திருந்த ரசிகர்களின் காதுகளோடு கண்களையும் தாலாட்ட வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.