‌தீ‌விரவா‌தியை‌க் கொ‌ன்ற பெ‌ண்ணு‌க்கு காவ‌ல்துறை அ‌திகா‌ரி பத‌வி

rukasana
webdunia photo
WD
ந‌மசாலைக‌ளிலு‌ம், பேரு‌ந்துக‌ளிலு‌மவே‌ண்டுமெ‌ன்றஇடி‌ப்பவ‌ர்களை‌ககூத‌ட்டி‌ககே‌ட்பய‌ந்தஒ‌ளி‌ந்தகொ‌ள்ளு‌மகால‌த்‌தி‌ல், ஒரு ‌தீ‌விரவா‌தி எ‌ன்றதெ‌ரி‌ந்து‌ம், த‌ன்னை‌கக‌ற்ப‌ழி‌க்வ‌ந்தவ‌ர்களஅடி‌த்தஉதை‌த்து, ‌தீ‌விரவாஇய‌க்க‌த்‌தி‌னதளப‌தி ஒருவனையே‌ தை‌ரியமாசு‌ட்டு‌ககொ‌ன்று‌ள்ளா‌ரஎ‌ன்றா‌லஅவ‌ரதது‌ணி‌ச்சலு‌ம், ‌வீர‌த்‌தி‌ற்கு‌மவேறசா‌ன்றுக‌ளவே‌ண்டுமோ?

இ‌ப்படி ஒரபெ‌ண்‌ணி‌ற்ககாவ‌ல்துறபத‌வி அ‌ளி‌க்காம‌லபோனா‌லஅதுதா‌னதவறு.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே ரஜோரி என்ற இடத்தில் உள்ள கால்சியான் கிராமத்தில் ருக்சனா என்ற பெண் வசிக்கிறார். கடந்த செப்டம்பர் 27-ந் தேதி அன்று அவருடைய வீட்டுக்குள் லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களை ருக்சனா, அவருடைய தம்பி அய்ஜாஸ், மாமா வகாலத் உசேன் ஆகியோர் தடுத்தனர்.

எனினும், தீவிரவாதிகள் முன்னேறியதால் ஆத்திரம் அடைந்த ருக்சனா, ஒரு தீவிரவாதியின் கையில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை பறித்து அவனை சுட்டுக் கொன்றார். மற்றொரு தீவிரவாதியையும் சுட்டார். அதில் அவனுக்கு காயம் ஏற்பட்டது. அதற்கு முன் துப்பாக்கியை உபயோகப்படுத்திய பழக்கமே இல்லாத ருக்சனாவின் வீரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முன்னதாக தீவிரவாதிகள் தாக்கியதில் அய்ஜாஸ் மற்றும் உசேன் ஆகியோர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, வீரப்பெண் ருக்சனாவுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில், தீவிரவாதிகளிடம் இருந்தும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. எனவே, ருக்சனா வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், ருக்சனா வீட்டில் கடந்த வெள்ளியன்று தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர்.

இந்த சூழ்நிலையில், ருக்சனாவின் வீரத்தை பாராட்டி அவருக்கு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு காவ‌ல்துறஅதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, ரஜோரி பகுதியின் காவ‌ல்துறசூப்பிரண்டு சவுகத் வட்டாலி நேற்று தெரிவித்தார். ருக்சனா தவிர, அவருடைய தம்பி அய்ஜாஸ் மற்றும் மாமா உசேன் ஆகியோருக்கும் காவ‌ல்துறை‌யி‌லபதவி அளிக்கப்பட்டுள்ளது.

வீர‌த்‌தி‌ற்கு‌ம், இ‌ந்‌திய‌பபெ‌ணஎ‌ன்கெளரவ‌த்‌தி‌ற்கும‌பெருமசே‌ர்‌க்கு‌மவகை‌யி‌லரு‌க்சனநட‌ந்தகொ‌‌ண்டு‌ள்ளா‌ர். இவரை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி பெ‌ண்களநாமு‌மநடபோடுவோ‌ம்.. அ‌ங்கஒரு ‌சில‌ர் ‌‌தீ‌விரவா‌திகளாக‌த் ‌தி‌ரி‌கி‌ன்றன‌ர். ஆனா‌லஇ‌ங்கே... எ‌ங்கபா‌ர்‌த்‌தாலு‌மப‌ல்வேறரூப‌ங்க‌ளி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளஅலை‌ந்தகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

நா‌மநே‌ரகொ‌ண்பா‌ர்வையு‌‌ம், ‌நி‌மி‌ர்‌ந்ந‌ன்னடையு‌மப‌யி‌ல்வோம‌ரு‌க்சனவ‌ழி‌யி‌ல்.
Webdunia|
தன்னுடைய வீட்டுக்குள் புகுந்தத‌ன்னை‌கக‌ற்‌ப‌ழி‌க்முய‌ன்தீவிரவாதிகளுட‌னபோராடி, ஒரு ‌தீ‌விரவா‌தி‌யி‌னகை‌யி‌லஇரு‌ந்த துப்பாக்கியை பறித்து, அவனையே சுட்டுக் கொன்ற வீரப்பெண் ருக்சனாவுக்கு காஷ்மீர் மா‌நிஅரசு, காவ‌ல்துறஅதிகாரி பதவியவழங்‌கியு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :