வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2016 (12:26 IST)

விஜயகாந்த் பேச்சை வைகோ கேட்கவில்லை: பிரேமலதா

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் விலகிய வைகோவின் முடிவை மாற்ற கோரிய விஜயகாந்தின் பேச்சை வைகோ கேட்கவில்லை என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்தார்.


 

 
மக்கள்நலக் கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறிவிட்டதாக கூறப்படுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த மனைவி பிரேமலதா கூறியதாவது:-
 
மக்கள்நலக் கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறிவிட்டதாக கூறப்படுவது உண்மையில்லை. கூட்டணியிலிருந்து விலகுவது பற்றி விஜயகாந்த் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்‌லை.
 
சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அனை‌வரும் ஒற்றுமையா‌கத்தான் இருந்தோம். தேர்தலில் வைகோ போட்டியிலிருந்து திடீரென்று விலகியது அவரது தனிப்பட்ட விசயம், இருந்தாலும் போட்டியிடுவதிலிருந்து விலகும் முடிவை திரும்பப்பெறுமாறு விஜயகாந்த் கேட்டுக்கொண்டும் அவரது பேச்சை வைகோ கேட்கவில்லை.
 
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணியும் தேமுதிகவுக்கு போட்டியே கிடையாது. அதிமுக, திமுக தான் எங்களுக்கு போட்டி. சுயநலத்திற்காக தேமுதிகவை விட்டு விலகுபவர்களைப் பற்றி நாங்கள் கவலை‌ப்படவில்லை. மாற்று அணி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுகவின் அழைப்பை கடைசி வரை ஏற்கவில்லை. 
 
மேலும் விஜயகாந்தை நான் இயக்குவதாக கூறுவது தவறான ‌கருத்து, திமுக தான் இத்தகைய கருத்தை பரப்பி வந்தது, என்று ‌பிரேமலதா தெரிவித்துள்ளார்.