வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2016 (17:31 IST)

துணை முதல்வர் ஆகிறாரா செந்தில் பாலாஜி?

கரூர் மாவட்டத்தின் முன்னாள் அ.தி.மு.க செயலாளரும், தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராகவும், தற்போது அரவக்குறிச்சி எம்.எல்.ஏவாகவும் இருப்பவர் செந்தில் பாலாஜி. 


 

 
கடந்த வருடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கைது செய்யப்பட்ட போது, முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, அடுத்த முதல்வர் பெயருக்கு செந்தில் பாலாஜியின் பெயர் தான் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அடுத்த முதல்வர் கனவு இவர் காணவில்லை என்றாலும், இவரது கட்சியின் விஸ்வாசமும், அம்மா மீது அவர் கொண்ட பற்றும் இவர் முதல்வர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.
 
அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த செந்தில் பாலாஜியை மூத்த நிர்வாகிகளின் புகாரின் பெயரில் கட்சியை விட்டு ஒரங்கட்டப்பட்ட நிலையில், அதே கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடாமல், அந்த தொகுதியை எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஒதுக்கி, அரவக்குறிச்சி தொகுதியை இவருக்கு அதே மாவட்டத்தில் கட்சி தலைமை கொடுத்தது. 
 
ஏனென்றால் கடந்த சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் அந்த தொகுதி தி.மு.க வின் கோட்டையாக உள்ள நிலையில், அந்த பெயரை தகர்த்தெறிய, செந்தில் பாலாஜியால் தான் முடியும் என்று கட்சி அறிவித்தது. 
 
மேலும் இதுவரை லியாவூதீன் சேட் என்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ மட்டும் கடந்த 1996 ம் ஆண்டு நின்று வெற்றி பெற்றாரே தவிர பின்பு யாரும், அ.தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெறவில்லை. 
 
மேலும் இந்த தேர்தல் சரியான தருணம் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா. செந்தில் பாலாஜியை நம்பி தேர்தலில் நிற்க தேர்தலில் கட்டளையிட்டார் அவரது கட்டளையை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் அவரால் நிறைவேற்றப்பட்டது. 
 
காரணம், ஆளுகின்ற அ.தி.மு.க-விலும், தி.மு.க-விலும் இவர் பெயருக்கு களங்கம் விளைவிப்பது தான் இவர்களது செயலாக இருந்த நிலையில், இந்திய அளவில் தேர்தலை இவரது அரவக்குறிச்சியில் நிறுத்தி பின்பு அது இடைத்தேர்தலாக நடத்தி பின்பு வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில் அவரது வெற்றிக்கனியை முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுக்க முயலும் போது உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில்., சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரிடம் அந்த வெற்றியை சொல்ல வெகுவாக காத்திருந்த நிலையில், முதல்வர் காலமானார்.
 
ஆனால் இன்று யார் பொதுச்செயலாளர், யார் முதல்வர், யார், யார் அமைச்சர்கள், மேலும் அமைச்சர் பதவி வேண்டுமென்று மிரட்டும் பழக்கத்திற்கு தள்ளப்பட்ட அ.தி.மு.க வின் நிலை ஒன்றே, ஒன்று தான்..  அம்மா உயிருடன் இருந்திருந்தால் தற்போது மிரட்டுபவர்கள், யார், யார் என்று இனம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை பாயும். ஆனால் அவர் இல்லை.


 

 
எனவே, வெற்றிடத்தை அ.தி.மு.க வே நிரப்ப வேண்டுமென்றும், முள் மேல் பட்ட சேலையை சேதமில்லாமல் எடுக்கும் முயற்சியில் அ.தி.மு.க வினர் அவ்வப்போது முடிவெடுத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து அவசர, அவசரமாக முதல்வராக ஒ.பி.எஸ்-ம், மற்ற அமைச்சர்களும் பதவிப்பிராமனத்தை கவர்னர் செய்து வைத்தார். ஆனால், தற்போது அ.தி.மு.க வின் பொதுச்செயலாளர் யார் என்றும், தமிழக துணை முதல்வர் யார் என்றும் டாக் ஒடி வருகின்றது. 
 
தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒரு பெண்மணி என்ற போதிலும் மற்ற கட்சிகளை நடுநடுங்க வைத்தவர், அப்போது அவரது கீழ் இருந்தவர் அவரது தோழி, சசிகலா மட்டுமே! இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் தங்களுக்கென்று சலுகை வேண்டுமென்றும் தி.மு.க வினரால் தூண்டி விடப்பட்டு தற்போது தனது பொதுச்செயலாளர் அல்லது அமைச்சர் பதவி வேண்டுமென்றும் சொங்கோட்டையன் தரப்பும் ஈடுபட, ஒ.பி.எஸ் ஐ முதல்வராக்கியது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தான். 
 
அவர்களது முயற்சியில் தம்பித்துரை முழு ஈடுபாட்டில் தான் தமிழக முதல்வராக மீண்டும் ஒ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதே கட்சிக்கு பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை வெறுக்கும் அ.தி.மு.க வினர், எப்படியும், அம்மா வகிக்கும் துறையையும், பொறுப்பையும் சின்னம்மா என்கின்ற சசிகலா தான் வகிக்க வேண்டும் என்கின்ற கருத்து நிலவும் நேரத்தில், சசிகலா குடும்பத்தினர் மற்றும் சொந்த பந்தங்கள் ஆட்டம் தீவிரமடையும், 
 
ஆதலால் எப்படி மறைந்த முதல்வர் அம்மா இருக்கும் போது, தோழி சசிகலா சொந்த பந்தங்களையும், கணவரையும் தவிர்த்தாரோ, அப்படி, சொந்த பந்தங்களை தவிர்க்க வேண்டுமென்றும் ஒரு மித்த மாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் தங்களது கொங்கு மண்டலத்திற்கும் எதாவது பங்கு தேவை தான் என்று கூறி,  தற்போது போர்க்கொடி தூக்கியுள்ள கொங்கு மண்டல அ.தி.மு.க வினருக்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், செந்தில் பாலாஜியும் தான் எதிர்பார்ப்பாக உள்ளனர்.
 
ஏனென்றால் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அவர்களது பேச்சிற்கு கட்டுப்படும் வகையிலும், எண்ணற்ற கட்சி வேலைகளை பொதுமக்களும், அ.தி.மு.க வினரும் செய்யும் வகையில் உள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியோ, முதல்வர் உயிருடன் இருக்கும் போதே, அவருக்கு பதவி வழங்க வில்லை.
 
மேலும் அப்போது செந்தில் பாலாஜியின் தொகுதியில் தேர்தல் நடைபெற வில்லை! செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ வாகவும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை! ஆனால் தற்போது செந்தில் பாலாஜி மீண்டும் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், துணை முதல்வர் பதவிக்கு தம்பித்துரையே அவரை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சின்னம்மா என்கின்ற சசிகலாவும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கட்சி மேலிடம் முதல் அடிப்படை தொண்டர்கள் வரை உற்சாகத்தில் உள்ளனர். 
 
எது எப்படியோ முதல்வராக ஆக்கி பார்க்க நினைத்த ஜெயலலிதா,  அவர் மறைவிற்கு பிறகு அவருக்கு துணை முதல்வர்  பதவியாவது கொடுத்தார்கள் அல்லவா என்கின்றனர்  செந்தில் பாலாஜி தரப்பினர். அம்மாவின் (மறைந்த முதல்வர் ஜெயலலலிதாவின்) விருப்பத்தை நிறைவேற்றுவார்களா? 
 
ஒட்டு மொத்த கட்சியினர் பொறுத்து தான் பார்க்க வேண்டும்
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்