காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திடம் தமிழ்நாடு யாசிக்கவில்லை. 1991ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற்ம் அளித்த இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் என்பது தெரிந்திருந்தும், “கூடுதலாக வரும் நீர் தமிழகத்திற்குத்தானே திறந்துவிடப்படும்” என்று ஏளனமாகக் கூறியுள்ளார் அம்மாநில அமைச்சர். இதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் இல்லை. அவருடைய அரசியலிற்கு தமிழ்நாட்டின் விவசாயி பாதிக்கப்படுவது குறித்து எந்தக் கவலையும் இல்லை. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றால், அதுவரை சம்பாவிற்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும்?