1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Murugan
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (15:44 IST)

அரசு விளம்பரங்களில் முதலமைச்சர்கள் படங்களுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

மத்திய அரசின் பணத்தில் இருந்து ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2015 மே 13 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.


 
 
மத்திய அரசின் விளம்பரங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோஹாய், ரமணா ஆகியோர் வெளியிட்ட தீர்ப்பில் “அரசு பணத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
 
மேலும், மத்திய அரசின் நிதியில் இருந்து செலவிடப்பட்டு வெளியாகும் விளம்பரங்களில் அமைச்சர்கள், தனி நபர் படங்கள் இடம்பெறுவது ஜனநாயகத்துக்கு முரணானது” என்று தீர்ப்பளித்தது.
 
இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதற்கு ஜெயலலிதா, கருணாநிதி உட்பட பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.