ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (09:25 IST)

இந்திய அரசு கொடுத்தது தற்காலிக அடைக்கலம்தான்! வெளிநாட்டுக்கு கிளம்பும் ஷேக் ஹசீனா?

Bangladesh

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் அந்நாட்டின் பிரதமரான ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் ஆகி உள்ள நிலையில் இதுவும் தற்காலிகமானது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 வங்கதேச நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்தவர் ஷேக் ஹசீனா.  சமீபத்தில் வங்கதேசத்தில்  ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் கலவரம் வெடித்தது.  இதில் வங்கதேச இராணுவம் மாணவர் போராட்டத்தை கடுமையாக கையாண்டதால் பல இடங்களில் கலவரம் அதிகமாகி அரசுக்கு எதிரான கலவரமாக மாறியது.

 

 இந்நிலையில் நேற்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரதமர் இல்லத்தில் இருந்து தப்பி இந்தியா வந்தடைந்தார்.  அவரது பிரதமர் இல்லத்தை புரட்சியாளர்கள்  சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஷேக் ஹசினா திரும்ப வங்கதேசம் வரமாட்டார் என்று அவரது மகன் அறிவித்துள்ளார்.
 

 

 இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா குறுகிய காலமே இந்தியாவில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்திய அரசு அளித்துள்ள பாதுகாப்பு தற்காலிகமானது என்றும்,  ஷேக் ஹசீனா பிரிட்டனுக்கு இடம் பெயர்வதற்காக பிரிட்டன் அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகவும்,  அதற்கான  அனுமதி கிடைப்பதற்காக அவர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

 

 வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் இந்த புரட்சி போராட்டங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

 

Edit by Prasanth.K