மலாலாவை துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதி சிறையிலிருந்து ஓட்டம்..

Taliban terrorist who attacked Malala escapes from Jail
Arun Prasath| Last Modified வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (15:41 IST)
மலாலா

மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தாலிபான் பயங்கரவாதி இஷானுல்லா இஷான் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பித்து ஓட்டம்.

பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் போராடி வருபவர் மலாலா யுசுப்சாய். மேலும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் கிடைத்தது. இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு மலாலா இஷானுல்லா இஷான் என்ற தாலிபான் பயங்கரவாதியால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு மலாலா குணமடைந்தார். அதன் பிறகு இஷானை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இஷான் தற்போது பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பித்து ஒடிவிட்டான்.

சிறையில் இருந்து தப்பித்த நிலையில், இஷான் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில் தான் சரணடைந்த கூறிய வாக்குறுதிகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை என கூறியுள்ளான்.

இஷானுல்லா இஷான் 2014 ஆம் ஆண்டில் பெஷாவரின் ராணுவ பள்ளியில் நடந்த தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு தொடர்புடையன். அதே போல் 2016 ஆம் ஆண்டு லாகூர் குண்டுவெடிப்பில் 75 பேர் பலியான சம்பவத்தோடும் தொடர்புடையவன் என்பது கூடுதல் தகவல்.இதில் மேலும் படிக்கவும் :