ஆறு வயது தமிழ் சிறுவன் பலாத்காரம் செய்து படுகொலை : இலங்கை கடற்படையினர் வெறித்தனம்


Murugan| Last Modified புதன், 27 ஜனவரி 2016 (14:58 IST)
ஆறு வயது தமிழ் சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டம் சம்பூர் எனும் பகுதியில், போருக்கு பிறகு தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர்.  அந்த கிராமத்தில் குகதாஸ் தர்சன் என்ற 6 வயது சிறுவனை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் போலிசாரிடம் புகார் கொடுத்திருந்தனர். அந்த சிறுவனை தேடும் பணியில் இலங்கை போலிசார் ஈடுபட்டிருந்தனர். 
 
இந்நிலையில், சம்பூர் இலங்கை கடற்படை முகாம் அருகே இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக தகவல் வெளியானது. போலிசார் அங்கு சென்று பார்த்தபோது, அது தொலைந்து போன தர்சன் என்பது தெரிய வந்தது.
 
அந்த சிறுவன் காணாமல் போன அன்று, கடைசியாக இலங்கை கடற்படையினர்தான் அழைத்துச் சென்றார்கள் என்று நேரில் பார்த்த சிறுவர்கள் கூறினர். தர்சனின் வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் போட்டுள்ளனர்.
 
மேலும், அவன் ஓரின சேர்க்கைக்கு உள்ளாக்கி, அதன் பின் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த பகுதியில் மீண்டும் குடியேறியுள்ள தமிழகர்களுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :