திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:51 IST)

இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்..! சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியதாக தகவல்.!!

Chinese Ship
15 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பலை நடுக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
 
சமீப காலமாக சரக்குக் கப்பல்கள் மீதான கடல்வழித் தாக்குதல்கள் திடீரென அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று கருத்தபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் இருந்தனர். 

கடத்தல் குறித்த தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
முன்னதாக, டிசம்பர் 23ஆம் தேதி அரபிக்கடலில் போர்பந்தர் கடற்கரையில் வணிகக் கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது.  அந்த கப்பல் ஊழியர்களில் 21 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.