ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (15:55 IST)

100 நாட்களில் ரூ.9800 கோடிக்கு ஏற்றுமதி செய்த ரஷ்யா: தடை விதித்து என்ன பயன்?

Russia
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது., மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை வாங்க கூடாது என்றும் அமெரிக்கா இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் இயற்றின
 
ஆனால் உக்ரைன் மீதான ஆரம்பித்து 100 நாட்களில் 9,800 கோடிக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து ரஷ்யா வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அப்படியானால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் விதித்த தடை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
சீனா ஜெர்மனி இத்தாலி இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும், ரஷ்யாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது