1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2015 (17:42 IST)

உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம்; தாக்க வந்த சிங்கத்திடமிருந்த தப்பிய புகைப்படக்காரர்

உயிரைப் பயணம் வைத்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பார்ப்பவர்கள் எல்லோரையையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
சாகசங்கள் செய்வது என்பது தனி மனிதர்களின் புரு விருப்பாக இருக்கிறது. இதற்காகவே பலர் உயிரை பணயம் வைத்து சாகத்தை புரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட டிஸ்கவரி சேனல் உயிருள்ள அனகோண்டா பாம்பின் வயிற்றுக்குள் புகுந்து ஒருவர் புகைப்படம் எடுப்பதை ‘நேரடி ஒளிபரப்பை’ நிகழ்த்தியது.
 

 
இந்நிலையில் ஒரு புகைப்படத்திற்காக தனது உயிரையே பணயம் வைத்திருக்கிறார். புகைப்படக் கலைஞரும், இயற்கை விரும்பியுமான பாகிஸ்தானை சேர்ந்த அடீஃப் சையது (38) எனபவர்தான் அந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.
 
புகைப்படக்காரரான அடீஃப் சையது அடிக்கடி காடுகளுக்கு சுற்றுலா சென்று புகைப்படம் எடுப்பது வழக்கம். அப்படி ஒரு நாள், காட்டுக்குள் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு ஆண் சிங்கம் கம்பீரமாக நடந்து வருவதைப் பார்த்துள்ளார்.
 
நீண்ட நாளாக ஒரு சிங்கத்தின் அசலான கம்பீரத்தை அருகிலிருந்து புகைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அதீப், படக்கென்று வண்டியிலிருந்து இறங்கி கேமராவுடன் ஊர்ந்து சென்று சிங்கத்திற்கு மிக அருகில் சென்றார்.
 
அவரது இந்த செய்கையை அசாத்திய துணிச்சல் என்றும் அடி முட்டாள்தனம் என்றும் பலர் விமர்சிக்கின்றனர். காரணம் அதீப் தன்னை நெருங்கி வருவதை பார்த்து விட்ட சிங்கம் கர்ஜித்து, அடீஃப் சையதின் மீது சீறிப் பாய்ந்தது. அப்படி பாயும் நொடியில் எடுக்கப்பட்டதுதான் இந்த புகைப்படம்.
 
அந்த திகில் நொடியில், மரணத்தை நேருக்கு நேர் சந்தித்த அடீஃப் சையது எப்படியோ உயிர்தப்பி காருக்குள் வந்து விழுந்தார். திகில் சம்பவம் குறித்து அடீஃப் சையது கூறுகையில் “அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் தோன்றிய உணர்வுகளை புகைப்படம் வீடியோ என்று எந்த ஊடகத்தினாலும் வெளிப்படுத்த முடியாது” என்றார்.