1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (08:02 IST)

60 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை: கொரோனாவால் திணறும் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் பலியாகியும் வருவதை அடுத்து அந்நாட்டு அரசை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது 
 
உலக நாடுகளையே கட்டுப்படுத்தி வல்லரசு என்ற பெயர் பெற்ற அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தங்கள் சொந்த நாட்டின் மக்களை காப்பாற்ற முடியாமல் திணறி வருவது உலகிற்கு ஒரு பெரும் பாடமாக உள்ளது.
 
இந்த நிலையில் கொரோனா வைரசால் இதுவரை அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது அதிர்ச்சியான செய்தியாகும். அதாவது சற்றுமுன் வெளியான தகவலின்படி அமெரிக்காவில் 59, 252 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் கொரோனா வைரசால் 31,36,508 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் கொரோனாவுக்கு 232,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 23,822 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவுக்கு 201,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 27,359 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு 165,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 23,660பேர்கள் பலியாகியுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 161,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21,678பேர்கள் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 3,136,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 217,813 பேர்கள் பலியாகியுள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.