ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 9 செப்டம்பர் 2023 (17:00 IST)

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 632 ஆக உயர்வு

Morocco earthquake
மொராக்கோவில்  நேற்றிரவு 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொரோக்கோ. இங்கு நேற்றிரவு திடீரென ஏற்பட்ட நில நடுநடுக்கத்தால் பலர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், இந்த நிலநடுக்கம் அல்ஜீரியா, போர்ச்சுக்கல் வரை உணரப்பட்டதாகவும், இதில் சுமார் 639 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மொரோக்கோ அமைச்சகம், நிலநடுக்கத்தால் 296 பேர் பலியானதாகவும்,  படுகாயமடைந்த 329 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.

இந்த சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் பற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்,  நேற்றிரவு 11:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், அதன்பின்னர், மீண்டும் 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில்  நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.

மொரோக்கோ தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் இந்த  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவானதாக கூறியுள்ளது.