வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 3 மே 2020 (08:05 IST)

உலக அளவில் 34 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் மட்டும் 11.6 லட்சம்!

உலக அளவில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக இருந்து வரும் நிலையில் இன்று கொரோனாவின் பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  34,01,189 பேர்கள் என இருந்த நிலையில் இன்று உலக அளவில் 34,83,891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 80ஆயிரம் பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்
 
அதேபோல் நேற்று உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,39,604 பேர்கள் என்ற நிலையில் இன்று உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244,772ஆக உள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11, 08,886 ஆக உயர்ந்துள்ளது என்பதும் நல்ல அறிகுறியாகும்.
 
அமெரிக்காவில் மட்டும் இதுவரை கொரோனாவால் 11,60,774 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் கொரோனாவுக்கு 67,444 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் ஸ்பெயினில் 2,45,567பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலியில் 2,09,328பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்தில் 1,82,260 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  பிரான்ஸில் 1,68,396 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெர்மனியில் 1,64,967 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,699 எனவும் பலியோனோர் எண்ணிக்கை 1,323 எனவும் குணமானோர் எண்ணிக்கை 10,819 எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது