திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி!

bill gates
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவர்களுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை முடிவடைந்த போதிலும் இன்னும் ஒருசில விஐபிகளுக்கு கொரோனா பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் வீட்டில் இருந்தே தனது அன்றாட பணிகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இருப்பினும் அவருக்கு பில்கேட்ஸ் அவர்களுக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே இருப்பதால் எந்த வித ஆபத்தும் இல்லை என்றும் அதனால் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது