வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 21 அக்டோபர் 2023 (14:47 IST)

இஸ்ரேல் ராணுவ உடைகளை தைக்க மறுத்த கேரள நிறுவனம்

israel -Palestine
இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகள் தைத்து அனுப்ப முடியாது என கேரளாவைச் சேர்ந்த  மரியன் அப்பாரல்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும்  ஹமாஸ்  தீவிரவாத அமைப்புக்கு இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

காசா மற்றும் லெபனான் எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் பொதுமக்களை அகற்றும் பணி முடிவடைந்ததும் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தாசா பகுதிகள் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருவதாகவும்  பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்குதல் தாக்குவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

இரு நாடுகள் இடையிலான போரில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரை நிறுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகள் தைத்து அனுப்ப முடியாது என கேரளாவைச் சேர்ந்த  மரியன் அப்பாரல்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  1 லட்சம் சீருடைக்கான ஆர்டரையும் இந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.

கேரளம் மா நிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மரியன் அப்பாரல்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நாட்டு ராணுவ சீருடைகளைத் தைத்து அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.