ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (13:18 IST)

நோயால் பாதித்தவர்களுக்கு கூடுதல் எதிர்ப்பு சக்தி! – இஸ்ரேல் ஆய்வாளர்கள் தகவல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்படாத நபர்களை விட எதிர்ப்பு சக்தி கூடியுள்ளதாக இஸ்ரேல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு நடத்திய இஸ்ரேல் ஆய்வாளர்கள், கொரோனா பாதிக்காத தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டுள்ள நபர்களை விட, கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு டெல்டா வைரஸுக்கு எதிரான எதிர்ப்புதிறன் அதிகமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இதனால் ஏற்கனவே கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தினாலே நல்ல எதிர்ப்புதிறனை அளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த ஆய்வை மற்ற நாட்டு ஆய்வாளர்கள் இதன்மீது மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.