இந்திய உளவு அமைப்பு ’ரா’ பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

pakistan
Ilavarasan| Last Modified வியாழன், 14 மே 2015 (17:38 IST)
இந்தியாவின் உளவு அமைப்பான "ரா' பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் எய்ஜாஸ் அகமது சௌதரி செய்தியாளரிடம் கூறியபோது,

"ரா' அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, இந்திய அதிகாரிகளிடம் பல்வேறு முறை தெரிவித்துவிட்டோம். கராச்சியில் அண்மையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர், தங்களுக்கு "ரா' அமைப்பு தீவிரவாத பயிற்சி அளித்ததாக தெரிவித்தனர். கராச்சியில் ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், "ரா' அமைப்புக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தால், இதுகுறித்து சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் முறையிடும் என்றார் அவர்.


இதில் மேலும் படிக்கவும் :