வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:19 IST)

அமெரிக்காவை தொடர்ந்து கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! வைரல் வீடியோ

America
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய அரசு பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ள நிலையில், அமெரிக்காவில் அரிசியின் தேவை அதிகரித்துள்ளது.

இந்திய அரசு பாசுமதி அல்லாத அரிசியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடைவிதித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் அரிசியின் தேவை அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்கள் சூப்பர் மார்க்கெட்டில், வரிசையில் நின்று அனுமதிக்கப்பட்ட  அதிகபட்ச அளவு அரிசியை வாங்கிச் செல்வதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த அறிவிப்பால், Panic Buying எனக் கூறப்படும் வகையில், சூப்பர் மார்க்கெட்டுகளில் சில சமயம் போட்டிபோட்டுக் கொண்டு  அரிசிகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த, ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசிதான் வழங்கப்படும் என்ற விதிமுறைகளை சூப்பர் மார்க்கெட்டுகளில் கொண்டு வந்துள்ளனர்.

இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.