ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (13:12 IST)

பொண்ணை கவனிக்கணும்தான்.. அதுக்காக இப்படியா? மகளுக்கு CCTV கேமரா மாட்டிய தந்தை!

CCTV Camera

தனது பெண்ணின் செயல்பாடுகளை கவனிப்பதற்காக தந்தை ஒருவர் மகளுக்கு சிசிடிவி கேமராவை பொருத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.

 

 

பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எப்போதும் பெரும் கவலை அளிப்பதாகவே உள்ளன. இதனால் பெண்கள் எங்கு சென்றாலும் வீட்டில் சொல்லிவிட்டு போக வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கவலையை போக்க பாகிஸ்தானை சேர்ந்த தந்தை ஒருவர் செய்த செயல்தான் தற்போது வைரலாகியுள்ளது.

 

பாகிஸ்தானை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகள் எங்கு சென்றாலும் அதை கண்காணிக்க, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அதை எங்கிருந்து வேண்டுமானாலும் அவர் தனது மொபைல் போன் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். அந்த பெண் பாகிஸ்தானின் தெருக்களில் தினம்தோறும் தலையில் சிசிடிவி பொருத்திய நிலையில் செல்வது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
 

 

அதை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்தார். அப்போது இவ்வாறாக கேமரா மாட்டியிருப்பது அசௌகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்த பெண், தனது தந்தை எது செய்தாலும் தனது நலனுக்காகதான் செய்வார் என்றும், அதனால் தந்தையின் முடிவுக்கு தான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அந்த வீடியோவிலும் கூட அவர் தலையில் சிசிடிவி கேமராவுடனே உள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.