1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (16:24 IST)

கொரோனா வைரஸ் வதந்தி: பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு !

கொரோனா வைரஸ் பற்றி பரப்பப்படும் தவறான தகவல்களை நீக்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் தங்கள் நாட்டில் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் இந்நோய் பாதிப்பால் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சீனாவை தவிர 36 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கியவர்களைக் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதல் பற்றி தவறான பல தகவல்கள் சமூக வலைதளங்களான பேஸ் புக் மற்றும் வாட் ஸ் ஆப் போன்றவற்றில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பீதிக்கும் பதற்றத்துக்கும் உள்ளாகின்றனர். உதாரணமாக கொரோனா வைரஸுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. நிலவேம்புக் கசாயம் குடித்தால் சரியாகிவிடும் என்றெல்லாம் பல தகவல்கல் பேஸ்புக்கில் கிடக்கின்றன.

இதையெல்லாம் நீக்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தங்கள் பிளாக்கில் தெரிவித்துள்ளது. அதனால் இதுபோன்ற போலியான தகவல்களை பார்த்தால் ரிப்போர்ட் செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளது.