காதலியின் பிணத்தை 15 மாதங்கள் பீரோவில் வைத்திருந்த காதலன் கைது

sivalingam| Last Modified செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (04:47 IST)
இங்கிலாந்து நாட்டில் பால்டன் நகரை சேர்ந்த 43 வயது ஆண்ட்ரூ கோலின் என்பவரும், 44 வயது விக்டோரியா செர்ரி என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திடீரென விக்டோரியா செர்ரி காணாமல் போய்விட்டதாக ஆண்ட்ரு புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் 15 மாதங்கள் கழித்து ஆண்ட்ரூ தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகார் காரணமாக போலீசார் அந்த வீட்டை தீவிரமாக சோதனை போட்டனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த பீரோ ஒன்றில் இருந்த விக்டோரியாவின் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஆண்ட்ரூவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். விக்டோரியா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :