1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (09:06 IST)

தீர்ந்தது கொரோனா பிரச்சனை: மருந்து கண்டுபிடித்து மருத்துவர்கள் சாதனை

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்குதல், சீனா முழுவதையும் தாக்கியது மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகளில் உள்ள மருத்துவர்கள் தீவிரமாக இருந்தனர். இந்த நிலையில் சீன மருத்துவர்கள் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை செய்துள்ளதாகவும், இதனையடுத்து கொரோனா வைரஸ் பிரச்சினை தீர்ந்தது என்றும் கூறப்படுகிறது 
 
சீனாவில் வசித்துவரும் கேமரூன் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மாணவரை காப்பாற்றும் முயற்சியில் சீனா மருத்துவர்கள் இருந்த நிலையில் அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மருந்துகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
 
இரண்டு வார மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு அவர் குணமடையும் அறிகுறிகள் தெரிந்ததாகவும் இதனை அடுத்து எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் மூலம் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமாகி விட்டது தெரியவந்தது. இதனை அடுத்து குரானா வைரஸ் தாக்குதலிலிருந்து குணமான முதல் நபராக அவர் கருதப்படுகிறார் 
 
இந்த நிலையில் இந்த மருந்தை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர், இந்த மருந்து விரைவில் அதிகாரபூர்வமாக கொரோனா வைரஸை அழிக்கும் மருந்து என அறிவிக்கப்பட்ட உள்ளதாகவும் இதனை அடுத்து சீனாவில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  இருப்பினும் கொரோனா வைரஸை குணமாக்கும் மருந்து இது தான் என அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்பட்டதால் சீனாவில் இன்னும் பதட்ட நிலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது