திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (14:01 IST)

2 மாதங்கள் வரை நீடிக்கும் கொரோனா அறிகுறி: குழந்தைகள் ஜாக்கிரதை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு பத்து அயிரத்திற்கு அதிகமாக உள்ளது. 
 
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் பேர் 2 மாதங்களுக்கு மேலாக அறிகுறிகளை அனுபவித்துள்ளனர். 4 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களில் 38 சதவீதம் பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 41 சதவீதம் பேரும் நீண்ட கால அறிகுறியை அனுபவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.