அந்த ஆப்பிளுக்கு பதில் இந்த ஆப்பிள்: ஐய்யோ தேவுடா... புலம்பும் இளைஞர்!

Last Updated: புதன், 13 பிப்ரவரி 2019 (16:13 IST)
சீனாவில் வனவிலங்கு சரணாலத்தில் இளைஞர் ஒருவர் கரடிக்கு ஆப்பிள் போடுவதற்கு பதில் தனது ஆப்பிள் ஐபோனை தூக்கி போட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
சீனாவில் உள்ள யான்செங் வனவிலங்கு பூங்காவில் இருக்கு கரடிகளுக்கு உணவாக ஆப்பிள் மற்றும் கேரட் போன்ற உணவு பொருட்களை தூக்கி போட்டு வந்த இளைஞர் ஒருவர் தெரியாமல் தனது ஆப்பிள் ஐபோனையும் தூக்கி போட்டுவிட்டார். 
 
ஐபோனை கண்ட அங்கிருந்த கரடிகள், அந்த ஐபோனை தீவிரமாக ஆராய்ந்து அந்த ஐபோனை வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு மறைவிடத்தை நோக்கி செல்கிறது. இவை அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
பின்னர், அங்கிருந்த பூங்கா அதிகாரிகள் வெகு நேரம் கழித்து ஐபோனை கொண்டு வந்தனர். ஆனால், ஐபோன் மோசமாக உடைந்திருந்ததாக கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :