திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை: கனடா அறிவிப்பு!

உக்ரைன் மீது 6-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் உலக நாடுகள் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் கனடா தற்போது ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கும் நிலையில் பல்வேறு நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கனடா அரசும் தடை விதித்துள்ளது
 
இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போராடும் உக்ரைன் வீரர்களின் செயலுக்கு கனடா ஆதரவளித்து வருகிறது. 
 
அந்த வகையில் கச்சா எண்ணெயால் லாபம் கிடைக்கும் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கவே அந்நாட்டிலிருந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது கச்சா எண்ணெய் இறக்குமதி தடையால் ரஷ்யாவின் பொருளாதார மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது