ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (12:21 IST)

சீனாவில் குழந்தைகளை தாக்கும் புதிய நோய் தொற்று! – விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு!

சீனாவில் பரவி வரும் புதிய நோய் தொற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பல நாடுகள் பொதுமுடக்கத்தால் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியை சந்தித்தன. பின்னர் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னர் உலகம் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

சீனாவிலும் கொரோனா குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தொற்று சீனாவை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்த புதிய நோய் தொற்று அதிகமாக குழந்தைகளை பாதிப்புக்கு உள்ளாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிம்மோனியா காய்ச்சல் போன்ற அறிகுறிகளோடு தோன்றும் இது சுவாச மண்டலத்தை தாக்குவதால் குழந்தைகள் மூச்சு விடவே சிரமப்படும் நிலைக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

இந்த புதிய நோய் தொற்று குறித்த சரியான பதில்கள் எதுவும் சீன மருத்துவ துறையிடமிருந்து வெளியாகவில்லை. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த தொற்று குறித்த விளக்கத்தை அளிக்குமாறு சீனாவிடம் கேட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டு மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வரும் நிலையில் இந்த புதிய தொற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K