1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (16:45 IST)

2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

jone fose
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் கலை மற்றும் அறிவியலில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில்,  2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி,  கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இயற்பியலுக்கு மூன்று பேர் நோபல் பரிசு பெற்றனர்.  அதேபோல் வேதியலில் , குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக  பணிபுரிந்த  மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவா ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு  நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் பொஸ்ஸே என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.