பிரபஞ்ச அழகியாக சவுத் ஆஃப்ரிக்கா மாடல் தேர்வு..

Arun Prasath| Last Modified செவ்வாய், 10 டிசம்பர் 2019 (12:42 IST)
2019 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆஃப்ரிக்காவை சேர்ந்த மாடல் சோசிபினி தன்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துக்கொண்டனர்.

இதில் தென் ஆஃப்ரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா, தாய்லாந்து, பியூடோ ரிகா ஆகிய நாடுகளை சேர்ந்த அழகிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இந்நிலையில் தென் ஆஃப்ரிக்காவை சேர்ந்த சோசிபினி தன்சி என்ற மாடல் அழகி மிஸ் யுனிவெர்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டாவது இடத்தை பியூர்டோ ரிகாவின் மேரிசனும், மூன்றாவது இடத்தை மெக்சிகோவின் சோஃபியா அரோகானும் பிடித்தனர்.


கருப்பினத்தை சேர்ந்த சோசிபினிக்கு வயது 26 ஆகும். இவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா மகுடம் சூட்டினர். பிரபஞ்ச அழகியாக தன்னை தேர்ந்தெடுத்தது குறித்து சோசிபினி “என்னை போன்ற தோலுடனும், கூந்தலுடனும் கூடிய பெண்களுக்கு மத்தியில் தான் நான் வளர்ந்தேன். எங்கள் நிறத்தை யாரும் அழகு என ஒத்துக்கொண்டது இல்லை. ஆனால் இன்று அதற்கான முடிவு வந்துவிட்டதாக எண்ணுகிறேன்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :