வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (16:08 IST)

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 12 பேர் பலி

isrel- Palestine
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 3 முக்கிய தலைவர்கள்  உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே  நீண்டகாலமாக பகை நிலவி வரும் நிலையில்,கடன் அவ்வப்போது போரிட்டு வருகிறது.

கடந்த வாரம் பாலஷ்தீன உண்ணாவிரத போராட்ட  நடத்தி வந்த பிரபலம் காதர் அட்னன் மரணமடைந்தார். இதையடுத்து. அந்த நாட்டிலிருந்து , இஸ்ரேல் நாட்டை நோக்கி ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல் படையினர்   காரணமின்றி தன்னை கைது செய்யப்பட்டதாக கூறி காதர் அட்னன் 87 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இஸ்ரேல் மீது பாலஸ்தீன படை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் படையினரும் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாகினர்.

இதுகுறித்து, பாலஸ்தீன இஸ்லாமிய்ட ஜிகாத் என்ற இயக்கம் கூறியதாவது: இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் தங்கள் 3 தலைவர்கள் ஜிகாத் அல் கன்னம், கலீல் அல்ம் பாதினி மற்றும் டாரிக் இஜ் அல் தீன் ஆகிய 3 பேர், அவர்களின் மனைவிகள், குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் இரு நாடுகளிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.