ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

Webdunia| Last Modified சனி, 19 ஜூலை 2008 (10:39 IST)
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முற்பகல் 11.39 (இந்திய நேரப்படி காலை 8.09) மணியளவில் ஹோன்சு கடற்கரையோரப் பகுதியில் 27 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட உயிர், பொருட் சேதம் குறித்து உடனடித் தகவல்கள் வெளியிடப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :