குடியேற்ற சீர்திருத்தங்களால் அமெரிக்காவுக்குதான் இழப்பு - இந்தியா

FILE

”உண்மையில் இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவுக்குதான் பாதிப்பு என்று சொல்லப்பட்டாலும், அமெரிக்காவுக்கும் பாதிப்பாக அமையலாம். இரண்டு நாடுகளின் உறவையும் பாதிக்கலாம்” என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறினார். இந்தியர்களை வேலைக்கு எடுக்கும் அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம் என்றார் அவர்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர்கள், அந்நாட்டில் உள்ள 11 மில்லியன் ஆவணப்படுத்தப்படாத வெளிநாட்டவர்களின் குடியேற்றங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் தரும் வகையில் பொது விதிமுறைகளை பரிந்துரை செய்திருந்தது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பராக் ஒபாமா, கடந்த ஆண்டு தாக்கல் செய்த குடியேற்ற சட்டத்தில், அமெரிக்க பல்கலைகழங்களில் அறிவியல் மேற்படிப்பு படித்த வெளிநாட்டவர்களுக்கு தானாகவே குடியுரிமை கிடைக்கும் சலுகையை அறிமுகப்படுத்தினார். ஆனால் திறமை வாய்ந்த ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற அனுமதிக்கும் ஹெச்.1 பி. விசாக்களை பெறும் விதிமுறைகளில் இறுக்கம் காட்டியது. அதற்கான கட்டணங்களையும் உயர்த்தியது.

இந்த விதிமுறை மாற்றங்களால் இந்தியாவின் ஐ.டி. துறை பாதிக்கப்படுவதோடு, அமெரிக்க நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்று இந்திய தூதர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமான தனது கவலைகளை தன்னை சந்தித்த 25 நபர்கள் அடங்கிய செனட் உறுப்பினர் குழுவினரிடமும் தெரிவித்துள்ளார்.

Webdunia|
அமெரிக்காவில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட குடியேற்ற சீர்திருத்த சட்டத்தால் அந்நாட்டுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வீட்டு பணிப்பெண்ணுக்கு விசா பெற்ற விவகாரத்தில் அமெரிக்க துணை தூதர் தேவயானி கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் இந்தியா வந்துள்ளார். இதனால் இரண்டு நாடுகளில் உறவு பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதிய தூதராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :