ஐ.நா அலுவலகம் மீது அல்- கய்தா தாக்குதல்; 20 பேர் பலி

Webdunia|
FILE
சோமாலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு அல்-கய்தா அமைப்புடனான அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர் ஒரு வாகனத்தில் நேற்று சென்றனர். அலுவலகத்தின் வாயிலை குண்டுகள் வைத்து தகர்த்து உள்ளே நுழைந்த அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று வெளிநாட்டவர்கள் உள்பட ஐ.நா. அலுவலக அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பயங்கரவாதிகளும் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் சம்பவ இடத்திலேயே அவர்களும் உயிரிழந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :