ஆப்கான் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

காபூல் | Webdunia| Last Modified சனி, 2 ஜனவரி 2010 (19:13 IST)
வருகிற மே மாதம் 22 ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் அலி நஜாஃபி தெரிவித்துள்ளார்.

ஆப்கான் தேர்தல் அமைப்பு முறைகளில் மிகப்பெரிய அளவில் சீரமைப்பு அவசியமாக உள்ளதாக பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தி வந்த நிலையில், காபூலில் இன்று தேர்தல் தேதியை அறிவித்தார் அலி நஜாஃபி.

நாடாளுமன்ற தேர்தலை நடத்த 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இச்செலவுகளை சமாளிக்க சர்வதேச சமுதாயத்திடமிருந்து 50 மில்லியன் டாலர்களை ஆப்கான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அதே சமயம் கொடை நாடுகள் ஆப்கானுக்கு இந்த நிதியுதவியை அளிக்கவில்லை என்றாலும், அறிவித்தபடி தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது குறித்து ஆப்கான் அரசு தரப்பில் தெளிவான பதில் அளிக்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :