ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (18:15 IST)

சூப்பர் மேன் படத்தின் நாயகி மரணம்!

சூப்பர் மேன் படத்தில் நடித்த பிரபல நடிகை மார்கட் கிட்டர் மரணம் அடைந்துள்ளார்.
 
கடந்த 1978ல் வெளியான 'சூப்பர்மேன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் (69). இவர் 'சூப்பர்மேன்' படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானார்.

மார்கட் கிட்டரின் நடிப்பில் கடைசியாக, 'தி நெய்பர்ஹுட்' திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. அதில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்தது.
 
இந்நிலையில், நேற்று மார்கட் கிட்டர் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். இவரது மறைவிற்கு உலகம் எங்கிலும் உள்ள ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.