ருசியாக சமைக்க எளிதான சில சமையல் டிப்ஸ்!

சமையல் என்பது ஒரு கலை. தினசரி நாம் அன்றாட சமையலில் சில சின்ன ட்ரிக்கை பின்பற்றினால் பல உணவு வகைகளை சுவையாக சமைக்க முடியும். அப்படிப்பட்ட ஈஸியான சில சமையல் டிப்ஸ் உங்களுக்காக..

Various Source

சப்பாத்தி மாவுடன் கொஞ்சம் மக்காச்சோள மாவை கலந்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்கி பின் குழம்பில் போட்டால் வழுவழுப்பு இல்லாமல் ருசியாக இருக்கும்.

பாதாம் தோலை எளிதாக நீக்க அதை சூடான நீரில் சிறிது நேரம் போட்டு வைக்க வேண்டும்

இட்லி மாவுடன் கடலை மாவு கொஞ்சமாக கலந்து தோசை சுட்டால் மொறுமொறுவென இருக்கும்.

Various Source

சாதம் வடிக்கும்போது குழைந்து போனால் சிறிது நல்லெண்ணெய் சேர்க்க குழையாமல் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்தால் அதில் ஒரு கேரட்டை போட்டு சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.

வாழைக்காய் நறுக்கும்போது கையில் சிறிது உப்புத்தூளை தடவிக் கொண்டால் கறை ஒட்டாது.