மஹாசிவராத்திரி ஸ்பெஷல்! பூரணக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சிவனுக்கு உரிய பதார்த்தங்களில் கொழுக்கட்டை சிறப்பு வாய்ந்தது. மஹாசிவராத்திரி பூஜைக்கு சுவையான பூரணக் கொழுக்கட்டை செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: கொழுக்கட்டை மாவு, வெல்லம், தேங்காய் துறுவல், நெய், ஏலக்காய் பொடித்தது, உப்பு தேவையான அளவு

அடுப்பில் கடாயை வைத்து நெய்விட்டு தேங்காய் துறுவல் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து பூரணமாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

கொழுக்கட்டை மாவுடன் வெந்நீர், உப்பு சேர்த்து சரியான பக்குவத்தில் பிசைய வேண்டும்.

Various source

பின்பு மாவை வட்டமாக தட்டி அதற்குள் பூரணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதை இட்லி பாத்திரத்தை வைத்து 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சூப்பரான பூரணக் கொழுக்கட்டை தயார்.