வெயிலுக்கு குடிக்க குளுகுளு நுங்கு சர்பத் ஈஸியா செய்யலாம்!

வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் வாட்டி வருகிறது. இந்த சமயத்தில் உடல் நீர்ச்சத்தை பராமரிக்க நுங்கு, இளநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். வெயிலுக்கு குளுகுளு நுங்கு சர்பத் எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: நுங்கு, சப்ஜா விதைகள், எலுமிச்சை, நன்னாரி சர்பத் எசென்ஸ்

சப்ஜா விதைகளை முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.

நுங்கை எடுத்து அதன் மேல் தோலை உரித்து விட்டு துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் லைட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

நறுக்கிய நுங்கு துண்டுகளோடு ஊற வைத்த சப்ஜா விதைகளை சேர்க்க வேண்டும்

Various source

அதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழம் பிழிந்து நன்றாக கலக்க வேண்டும்.

இப்போது சுவையான நுங்கு சர்பத் தயார். நுங்கு சர்பத் குடிப்பதால் தாகம் தணியும். உடலில் நீர்ச்சத்து பிரச்சினைகள் ஏற்படாது.