மழைக்கு இதமாக சூடான சூப்பரான தூதுவளை மிளகு ரசம் ரெசிபி!

மழை நேரங்களில் சூடான உணவுகளையே மனம் தேடும், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இறுமல் பிரச்சினைகளை போக்கும் சூடான சூப்பரான தூதுவளை ரசம் வைப்பது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: தூதுவளை, வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், புளி, பெருங்காய தூள், வரமிளகாய், தக்காளி, கடுகு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி

தூதுவளை இலையை கழுவி சுத்தம் செய்து கடாயில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கவிட்டு புளிக்கரைசல், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், இடித்த பூண்டு, வெங்காயம் சேர்க்க வேண்டும்.

பின்னர் அரைத்த தூதுவளையை அதில் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வர மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

அதை கொதிக்கும் ரசத்தில் கலந்து விட்டு மிளகு தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால் கமகமக்கும் தூதுவளை ரசம் தயார்.