ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ரஸ்க் அல்வா செய்வது எப்படி?

ரம்ஜான் என்றாலே பிரியாணி, குலாப் ஜாமுன் என ஸ்பெஷல் உணவுகள் பல உண்டு. அந்த வகையில் பிரபலமானதுதான் ரஸ்க் அல்வா. ரம்ஜான் ஸ்பெஷல் ரஸ்க் அல்வா எளிதாக செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: ரஸ்க், நெய், முந்திரி, உலர் திராட்சை, பால், சர்க்கரை, ஏலக்காய் தூள்

20 ரஸ்க்கை எடுத்து சின்ன துண்டுகளாக உடைத்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, உலர்ந்த திராட்சைகளை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் ரஸ்க்கை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்னர் அதோடு காய்ச்சிய பாலை சேர்த்து கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

பின்னர் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறிவிட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்க்க வேண்டும்.

அல்வா வாணலியில் ஒட்டாத பதத்திற்கு வரும்போது ஏலக்காய் பொடியை தூவி இறக்க வேண்டும்.

Various Source

பின்னர் அதில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சையை தூவினால் சூப்பரான சுவையான ரஸ்க் அல்வா தயார்.