சத்தான சுவையான ராகி சாக்லேட் கேக் ஈஸியா செய்யலாம்!

கேக் என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒரு தின்பண்டம். உடலுக்கு சத்துகள் தரும் ராகியை பயன்படுத்தி சுவையான குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கேக்கை எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: ராகி மாவு, கோகோ பவுடர், முட்டை, சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், வெணிலா எசன்ஸ்

இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் கொஞ்சம் எண்ணெய் அரை கப் கோகோ பவுடர், ஒரு ஸ்பூன் வெனிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும்.

ராகியை நன்றாக மாவாக்கி சல்லடை போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கப் ராகி மாவுக்கு ஒரு கப் சர்க்கரை விகிதம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் மிக்ஸியில் அடித்து வைத்த முட்டைக்கலவை, சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் இட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் இந்த கேக் மாவை இட்டு ஓவன் அல்லது குக்கரில் வைத்து எடுத்தால் சுவையான ராகி சாக்லேட் கேக் தயார்.

இதனுடன் சுவையை கூட்ட முந்திரி, பாதம், கலர் ட்ரை ப்ரூட்ஸை சேர்க்கலாம்.

Various Source