ருசியான காளான் கிரேவி வீட்டிலேயே செய்யலாம்..!

காளான் சைவ உணவுப் பொருட்களில் ஆண்டி ஆக்சிடன்ஸ், விட்டமின்கள் கொண்ட உணவாகும். காளனை வைத்து சூப்பரான சுவையான கிரேவில் எளிதாக செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: நறுக்கிய காளான் – 2 கப், வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு : மிளகு – 1 டீஸ்பூன், 2 வரமிளகாய், 1 ஸ்பூன் தனியா தூள், சோம்பு, சீரகம் அரை ஸ்பூன், பூண்டு 5 பல்

மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து குழைவாக மசாலா அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய காளானை சேர்க்க வேண்டும். காளானில் உள்ள தண்ணீர் வெளியேறி அதிலேயே காளான் வெந்துவிடும்.

பின்னர் நறுக்கிய சேர்த்து சிறிது நேரம் மூடிவைத்து, பின்னர் மஞ்சள் தூள், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி, அடுப்பை சிம்மில் வைத்து இறக்கி கொத்தமல்லி தழை தூவினால் சுவையான காளான் கிரேவி தயார்.

Various source