நெய் மணக்கும் பாதாம் அல்வா ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்!

அல்வா என்றாலே பலருக்கும் விருப்பமான பட்சணம்தான். கோதுமை அல்வா, கேரட் அல்வா என அல்வாவை பல வெரைட்டிகளில் செய்யலாம். நெய் மணத்துடன் கூடிய சுவையான பாதாம் அல்வா எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு – 100 கிராம், சர்க்கரை – 150 கிராம், நெய் – 50 கிராம், பால் – 100 மிலி, உப்பு, குங்குமப்பூ

பாதாமை அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் பாலை ஊற்றி அரைத்த பாதாம் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நல்ல சூடு வந்ததும் சர்க்கரை, உப்பு ஒரு சிட்டிகை, நெய் சேர்த்து 15 நிமிடம் வரை மிதமான சூட்டில் வைத்துக் கிளற வேண்டும்.

எல்லாம் சேர்ந்து நல்ல கெட்டி பதம் வரும்போது குங்குமப்பூ சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கொண்டே கிளற வேண்டும்.

அல்வா பதம் வந்ததும் இறக்கி நீட்டமாக சீவிய பாதம் மேலே தூவி பரிமாறினால் சூப்பரான சுவையான பாதம் அல்வா தயார்.