கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்றும் 6 மூலிகை பானங்கள்!

கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் உடலை குளிர்விக்க சில மூலிகை பானங்கள் ஆயுர்வேதத்தில் கொடுக்கப்படுகிறது. அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

Various Source

புதினா இலையை கஷாயம் செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியடையும். தட்டம்மை மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.

கற்றாழையிலிருந்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகுவது வெயிலை தணிக்க மிகவும் உதவும். உடல்சூட்டை குறைக்கும்.

செம்பருத்தி தேநீர் உட்கொள்வது உடல் வெப்பநிலை மற்றும் நீரேற்றத்தை சீராக்க உதவுகிறது. இது ஒரு அற்புதமான கோடைகால பானம்.

சோம்பு தண்ணீர் பாரம்பரியமாக உடலை குளிர்விக்கவும், செரிமானத்திற்கு உதவவும் பயன்படுகிறது.

உடலை குளிர்விக்கும் குணம் கொண்ட கொத்தமல்லியை கோடையில் சாப்பிடுவது நல்லது. மேலும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.

துளசி தண்ணீர் அல்லது துளசி தேநீர் குடிப்பது கோடை வெப்பத்தை வெல்ல உதவும்.

குறிப்பு: இந்த தகவல் ஆரோக்கிய நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Various Source